Sunday, 15 April 2012

தொடரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் - அதன் நியாயமும் தேவையும் - கோவையில் கருத்தரங்கம்


கூடங்குளம் அணு உலையை ஏன் மூடவேண்டும்?
தொடரும் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் நியாயம் என்ன?

ஆகிய கேள்விகளை முன் நிறுத்தி நடத்தப்படும்
கருத்தரங்கிற்கு
தங்களை அன்போடு அழைக்கிறோம்.

இடம்: அண்ணாமலை ஓட்டல் அரங்கம், ரயில்வே சாலை, கோவை.
நாள்: 22.04.2012 (ஞாயிறு), காலை சரியாக 9.30 மணிக்கு.

தலைமை: திரு. கு. இராமகிருட்டிணன்
பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்.
ஒருங்கிணைப்பாளர், (கோவை மாவட்டம்)
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்கம், தமிழ் நாடு.

சிறப்புரை: திரு. நீரஜ் ஜெய்ன் (NEERAJ JAIN).
புகழ் பெற்ற அணு உலை ஆய்வாளர்,
மகாராட்டிரத்தில் இயங்கிவரும் ‘லோகாயத்என்னும் இயக்கத்தின் தலைவர்.

கருத்துரை: டாக்டர். ஆர். ரமேஷ்
மருத்துவர் மற்றும் நிலவியல் ஆய்வாளர்.

வரவேற்புரை: திரு. பொன். சந்திரன்
மக்கள் சிவில் உரிமைக் கழகம், கோவை.

·         கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு என்பது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானதா?
·         தேசத் துரோகக் குற்றமா? அல்லது
·         தென் தமிழ் நாட்டையும் மானுடத்தையும் காப்பதற்கான மனித உரிமைச் செயல்பாடா?
·         கூடங்குளம் அணு உலை கூடாது என்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் என்ன?

போன்ற அடிப்படை கேள்விகளை விவாதிப்பதற்கான கருத்தரங்கில்
பங்கு பெறுவோம்! விழிப்பு கொள்வோம்!!
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு, கோவை
15, சரசுவதி குடியிருப்பு, கணபதி புதூர் 3வது தெரு, கோவை: 641006
தொடர்புக்கு: 9443822256; 9443039630; Email: antinuke.kovai@gmail.com; Blog: antinukekovai.blogspot.in
குறிப்பு: திரு. நீரஜ் ஜெய்ன் அவர்கள் நிகழ்ச்சியன்று மதியம் 12.30மணிக்கு மும்பாய் செல்ல இருப்பதால் கருத்தரங்கம் குறித்த நேரத்தில் தொடங்கிவிடும்.

No comments:

Post a Comment