Sunday, 11 December 2011

அணு உலையை மூடக்கோரி கூடங்குளம் பெண்கள் கோவையில் உண்ணாவிரதம்



நாள்: 15.12.2011 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: ஓட்டல் தமிழ் நாடு அருகில், காந்திபுரம், கோவை.

மேற்படி நடக்கவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கோவையைச் சேர்ந்த 64 மக்கள் நல அமைப்புகள் தங்கள் ஆதரவை தெரிவித்து உண்ணா விரதப் போராட்டத்தில் பங்குபெற இசைவு தெரிவித்துள்ளன.

உண்ணாவிரதப் போராட்ட்த்திற்கு அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப. உதயகுமார் அவர்கள் தலைமை தாங்குவார்.

உண்ணாவிரத்த்தை இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு கோ. நம்மாழ்வார் அவர்கள் தொடங்கிவைத்து உரையாற்றுவார்.  பேரூர் ஆதீனம் இளையப்பட்டம் தவத்திரு மருதாசல அடிகளார் உண்ணா நிலைப் போராட்ட்த்தை முடித்து வைத்து நிறைவுறையாற்றுவார்.

வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், ம.தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, கொங்கு இளைஞர் பேரவை குமார. இரவிக்குமார், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கோவை சையத், , விவசாய சஙகத் தலைவர் நல்லுசாமி, ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான், சோசலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாவட்ட்த் தலைவர் அபுதாஹீர், போரட்டக்குழுவின் வல்லுனர்களில் முகாமையானவரான டாக்டர் ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

இவர்களைத் தவிர பல்வேறு அரசியல் இயக்கத் தலைவர்கள், சமூக இயக்கத் தலைவர்கள், தொழில் முனைவோர், அறிஞர்கள், படைப்பாளிகள், சுற்றுச் சூழல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு கருத்துரை மற்றும் வாழ்த்துரை வழங்க இருக்கின்றனர்.

கூடங்குளத்திலிருந்து வருகைத் தரும் போராடும் பெண்கள் மற்றும் குழந்தைகள் இப்போராட்ட்த்தின் தேவைப் பற்றியும், கூடங்குளம் அணு உலை எப்படி தமிழகத்தின் மின் பற்றாகுறைக்கு தீர்வாகாது என்றும் போராட்ட்த்திலிருந்து தாம் பெற்ற அனுபவங்களைப் பற்றியும் உரையாகவும், முழக்கங்களாகவும், பாடல்களாகவும் வழங்கவுள்ளனர்.

வாய்ப்பு உள்ளவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment